இலங்கையில் ஆட்டோவில் தனியாகப் பயணித்த நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண், தன்னை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த இளைஞர் உடலுறவுக்கு அழைத்ததாகவும், பின்னர் தனக்கு முன் நின்றுகொண்டு சுயஇன்பம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 23 வயது இளைஞர் ஒருவர் நேற்று (நவ., 18) கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.