ஆர்மீனியா நாட்டில் உள்ள பள்ளிகள் 'செஸ்' விளையாட்டை கட்டாய பாடமாக கொண்டுள்ளன. ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் செஸ், கணிதம் மற்றும் வரலாற்றைப் போலவே மதிப்பிடப்படுகிறது. கடந்த 2011-12 முதல் இது அந்நாட்டில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைநகரான Yerevan, இளஞ்சிவப்பு நிற எரிமலை பாறையிலிருந்து கட்டப்பட்ட பழங்கால கட்டிடங்களுக்காக 'இளஞ்சிவப்பு நகரம்' என்று அழைக்கப்படுகிறது.