GTA 6 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. அறிமுகமாகிறது லிமிடெட் எடிஷன் PS5 DualSense!

GTA 6 கேம் வெளியீட்டை முன்னிட்டு சோனி மற்றும் ராக்ஸ்டார் கேம்ஸ் இணைந்து லிமிடெட் எடிஷன் PS5 DualSense கன்ட்ரோலர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. GTA 6 நவம்பர் 19, 2026 அன்று வெளியாகும் நிலையில், அதே நாளில் இந்த சிறப்பு கன்ட்ரோலர்களும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை சுமார் ரூ.8,000 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், விலை மற்றும் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி

✕
✕