திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 1) கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "தமிழகத்தில் இன்றும் இரு முக்கிய சக்திகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. அதில் ஒன்று தூய சக்தியான தவெக, மற்றொன்று தீய சக்தியான திமுக" என தெரிவித்தார். மேலும், அதிமுகவும் திமுகவும் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு, தவெக ஆட்சியை அமைப்பதை தடுக்க தீவிரமாக முயன்றதாக அவர் குற்றம் சாட்டினார்.