திமுக, தவெக இடையேதான் போட்டி - டிடிவி தினகரன்

2026 தேர்தலில் திமுக, தவெக இடையேதான் போட்டி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ., 06) செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக வருகையால் அதிமுகவுக்கு 3வது இடம்தான் கிடைக்கும். அமமுகவை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணி இன்றும் பலமாக இருப்பதற்கு காரணமே எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் அடாவடியாக செயல்பட்டு அதிமுகவை பலவீனப்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி