மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த எனக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்த வைகோவுக்கு நன்றி என கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை விட பெரிய பொறுப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் தனக்கு வாக்களித்த தொகுதி மக்களின் நம்பிக்கையே முக்கியம் என கருதி திமுகவுடன் தொடர்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.