கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், பல இடங்களில் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாகவும் சட்டப்பேரவையில் இன்று (ஆக.24) நிதியமைச்சர் மரிய வில்சன் சுமத்திய குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
நன்றி:News18