”நாம் பெற்ற பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைத்திருக்கிறார்” - இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் 5 விழுக்காடு வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் இன்று (ஜன.05) நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கள்ளக்குறிச்சியில் மருத்துவமனை கொண்டுவந்தது நாங்கள் தான். அதிமுக அடிக்கல் நாட்டிய மருத்துவமனையை திமுக திறந்துவைத்துள்ளது. நாம் பெற்ற பிள்ளைக்கு மு.க.ஸ்டாலின் பெயர் வைத்திருக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி