தமிழ்நாட்டு மக்களுக்கு பல முக்கிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளதாக கனிமொழி என்.வி.என். சோமு எம்.பி. தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "2024ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு, கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அதை இன்னும் அவர்கள் நிறைவேற்றவில்லை. நமது முதலமைச்சர் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து, 30,000 பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளார்” என்றார்.