“மெட்ரோ வரக்கூடாது என்பதே முதலமைச்சரின் எண்ணம்” - அண்ணாமலை

“தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமரிடம், மெட்ரோ குறித்து ஏன் வலியுறுத்தவில்லை?” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சியில் இன்று (நவ.23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை, மெட்ரோ திட்டம் வரவேண்டும் என எண்ணினால், கோவை வந்த பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தியிருக்கலாம். ஆனால், தான் டெல்லி சென்று மோடியிடம் முறையிடப்போவதாக கூறுகிறார். மெட்ரோ வரக்கூடாது என்பதே முதலமைச்சரின் எண்ணமாக உள்ளது” என விமர்சித்துள்ளார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி