சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் 16 நடமாடும் உழவர் அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.16) தொடங்கி வைத்தார். இத்துடன், 6 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் 6 துணை வேளாண் மையங்களையும் அவர் திறந்து வைத்தார். இதன் மூலம் விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நன்றி:SunNews