10 நாட்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாட்களுக்குப் பின் இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். கடந்த ஜூலை 21ஆம் தேதி ஏற்பட்ட லேசான தலைசுற்றல் காரணமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சைக்குப் பின் 27ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி