தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை.. மத்திய அரசு

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்குவதை உறுதி செய்யக்கோரி அனன்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்த விசாரணையில், தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பட வேண்டும் என வற்புறுத்தவில்லை. முதலில் வந்தே மாதரவும் அதனை தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕