தேனியில் நேற்று (பிப்.7) நடந்த நாதக பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில், மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இருதரப்பு மோதலில், தவெக நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த வழக்கில், தவெகவின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கௌதம், தனவந்தன், வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், லெப்ட் பாண்டி தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7