தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். சேவை உரிமை சட்டம் மற்றும் நீர்வளத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என கூறிய அவர், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பதும், வேலைவாய்ப்பு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.