சிறுவர்களை நிர்வாணமாக்கி பிரம்பால் தாக்கிய கொடூரம்

நெல்லையில் மாங்காய் பறித்த பள்ளி சிறுவர்களை தோட்ட உரிமையாளர் கொடூரமாக தாக்கியுள்ளார். டவுன் அருகே லாலுகாபுரத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் நேற்று (பிப்., 17) பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மாங்காய் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த முருகன், சிறுவர்களை நிர்வாணமாக்கி, பின்புறத்தில் பிரம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சிறுவர்கள் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி