பீகார்: பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியரான ஷோபா தேவி, ஜானிபூரில் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று ஜூலை 31 மாலை ஷோபா தேவியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அஞ்சலி, அன்ஷ் ஆகிய இருவரையும் உயிருடன் எரித்து கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.