தங்கையைக் காதலித்த இளைஞரை போட்டுத்தள்ளிய அண்ணன்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் தங்கையைக் காதலித்த இளைஞரை, 17 வயது அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வீர மாணிக்கம் (18) என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் அண்ணன் ஆத்திரத்தில் வீர மாணிக்கத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தொடர்ந்து, சிறுவனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி