திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடக்கும் கார்த்திகை தீபத்திருவிழா மகத்தான திரளுடன் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர திருவண்ணாமலை மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை கண்ட பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்தை எழுப்பினர்.
நன்றி: பாலிமர்