தமிழ்நாட்டி, 1996-ல் ஆட்சியைப் பிடித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், ஊழல் வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கைது செய்ய உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், 2001 ஜூன் 30ம் தேதி மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மேம்பால முறைகேடு வழக்கில் நள்ளிரவில் கலைஞர் கருணாநிதியைக் கைது செய்ய உத்தரவிட்டார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அந்தக் காட்சிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த நள்ளிரவுக் கைது இருவரின் அரசியல் மோதலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது