உலகளவில் புதுமையான வகையிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் பல்வேறு ஹோட்டல்கள் உள்ளன. அதுபோன்ற ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் வியப்புமிக்க அனுபவத்தை கொடுக்கும். அப்படியான ஒரு ஹோட்டல் தான் கென்யாவின் லங்காடாவில் அமைந்துள்ள ஒட்டகச் சிவிங்கி ஹோட்டல். காட்டுப்பகுதியில் உள்ள இந்த ஹோட்டலில் ஓட்டகச்சிவிங்கிகளோடு சேர்ந்து உங்கள் உணவை பரிமாறிக் கொண்டு சாப்பிட முடியும்.