அதிக நார்ச்சத்து கொண்ட வரகு அரிசி, உடல் எடையை குறைக்கவும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வயிறு மற்றும் குடல் புண்களை குணப்படுத்தும் இது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த சிறுதானியத்தை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.