குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் AI171 போயிங் 787 விபத்தில் சிக்கியது. தற்போது வரை இவ்விபத்தில் 170 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய விமானம் கடந்த 11 ஆண்டுகளாக ஏர் இந்திய நிறுவனத்தில் சேவையில் இருந்து வந்துள்ளது. விமானம் டெல்லியில் புறப்பட்டு அகமதாபாத் வந்துள்ளது. பின் அங்கிருந்து லண்டன் செல்ல பறந்தபோது சோகம் நடந்துள்ளது. போயிங் ட்ரீம்லைனர் விமானம் விபத்தில் சிக்கியது இந்தியாவில் முதல் முறை ஆகும்.