இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடும்போது அந்த அணி வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்து வருகிறது. இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் கைகுலுக்க மாட்டோம் என இந்தியா ஆரம்பித்து வைத்தது சிறுபிள்ளைத் தனமான விஷயம். நம்மைப் போன்ற நாடு இதைச் செய்வது பொருத்தமற்றது. விளையாட்டின் உணர்வை மதித்து ஆடுங்கள். இல்லையென்றால் விளையாடவே தேவையில்லை” என்றார்.