ஒரு ஓட்டுக்கு ரூ.6000 தரும் தவெகவினர்.. நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு

தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வீதம் தவெகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக நாதக வேட்பாளர் கார்த்திகா குற்றம்சாட்டியுள்ளார். ஜி-பே மூலமாகவும், டிபன் பாக்ஸ்களில் மறைத்து வைத்தும் தவெகவினர் பண விநியோகம் செய்வதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் அவர் புகார் அளித்துள்ளார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஜனநாயகத்தைச் சீரழிக்கும் இச்செயல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕