வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ந்தது, நடிகை சமந்தா விவாகரத்து போன்ற பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்து கவனம் பெற்ற ஜோதிடர் பிரஷாந்த் கினி. இந்நிலையில், அவர் தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், அக்கட்சி ஒற்றை இலக்கத் தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் அவர் கணித்துள்ளார்.