சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்ததாக கூறப்படும் தவெக ஆதரவாளர் எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டில் சோதனை நடத்தியபோது கஞ்சா செடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக செடியை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.