தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே 22) செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்கள் பதவிக்காக தவெக அரசை ஆதரிக்கவில்லை. மக்கள் ஆதரவு அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவளித்தோம். அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட அதிமுகவின் திட்டங்கள் தொடர வேண்டும் என வலியுறுத்தினோம். பதவிக்காக சென்றோம் என சில பொய்யான தகவலை பரப்புகிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என தெரிவித்தார்.