தவெக அமைச்சரவையில் இடம் பெறும் புதிய அமைச்சர்கள் நாளை (மே.21) பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், புதிய அமைச்சர்களில் லிஸ்ட் வெளியானதாக செய்திகள் வெளியாகின. அதன்படி, அறந்தாங்கி MLA முகமது பர்வேஸ், தாம்பரம் MLA சரத்குமார், வேளச்சேரி MLA குமார், RK நகர் MLA மரிய வில்சன், கடலூர் MLA ராஜ்குமார், திருநெல்வேலி MLA ஆர்.எஸ்.முருகன், குமாரபாளையம் MLA விஜயலட்சுமி, சேலம் தெற்கு MLA விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.