அமைச்சர் - மாவட்ட செயலாளர் மோதலால் தவெக பொதுக்கூட்டம் ரத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் விருதுநகர் வடமேற்கு மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் இடையேயான கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்துடன் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி