போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கும் நீதிகேட்டு தவெக சார்பில், இன்று (ஜூலை 13) சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விஜய் தலைமையேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தவெக நிர்வாகிகள் 5,000க்கும் அதிகமானோர் நேரில் வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, தவெக நிர்வாகிகள் தடுப்புகளை தாண்டி போராட்ட அரங்கிற்குள் செல்ல முயன்றதில் சாலை நடுவே இருந்த கம்பி அமைப்புகள் சேதமாகியுள்ளன. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்து அறவழியில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
Thanks: News Tamil 24X7