செங்கல்பட்டு மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் இன்று பிற்பகலில் தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்காக எம்எல்ஏக்கள் வரத்தொடங்கியுள்ளனர். விடுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், வெளியில் எதுவும் தெரியாதபடி, நுழைவு வாயில் அருகே திறந்தவெளிப் பகுதிகளில் தகரங்கள் மூலம் மறைக்கப்பட்டு வருகிறது. இந்த விடுதி 3 நாட்களுக்கு தவெக சார்பில் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி: பாலிமர்