சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) புதிய உறுப்பினராகத் தன்னை நியமித்ததற்காக, முதலமைச்சர் விஜய்க்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் தனது 'எக்ஸ்' தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், "என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த முக்கியப் பொறுப்பை வழங்கிய முதலமைச்சரின் நம்பிக்கையைக் காக்கும் வகையில், முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்றுவேன்" என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.