சாலையை மறித்து பிறந்தநாள் கொண்டாடிய தவெக மா.செ

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், தவெக கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்கள் 3 கி.மீ. சாலைவலம் சென்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் மாலை அணிவித்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் தலையிட்டபோது, அவர்களுடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி