தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க 2 இடம் தேவைப்படும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் அதிரடி புகார் அளித்துள்ளார். தவெக தலைவர் விஜய் குதிரை பேரம் நடத்துவதாகவும், மன்னார்குடி அமமுக எம்.எல்.ஏ. காமராஜைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். காமராஜ் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தினகரன், இது ஜனநாயகப் படுகொலை எனச் சாடியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் மர்மமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது.