பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: நியூஸ் தமிழ்