ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்: விசிகவுக்கு விஜய் கடிதம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பூர்த்தி செய்ய இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு கோரி விசிக தலைவர் திருமாவளவனுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிகவின் முடிவு தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி