திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய தவெக தலைவர் விஜய், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி புத்தகமாக வெளியிடப்படும் என அறிவித்தார். மேலும், இன்றைய பரப்புரைக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சிறு, குறு தொழில் செய்வோருக்கான பல்வேறு முக்கிய வாக்குறுதிகளையும் அவர் வழங்கியுள்ளார்.