தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா 3ஆம் கட்டமாக இன்று மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. தவெக தலைவர் விஜய் நேரடியாக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசை வழங்க உள்ளார். இந்த கல்வி விழாவிற்கு பின் தவெக தலைவர் விஜய் அடுத்தக்கட்ட அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விஜய் பிறந்தநாளன்று அரசியல் சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: பாலிமர்