"தவெக தலைவர் விஜய்க்கு முதிர்ச்சியில்லை”.. டி.கே.சிவகுமார் விமர்சனம்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதலமைச்சருமான டி.கே.சிவகுமார் இன்று (ஏப்.9) வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்கு முதிர்ச்சி என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவருடன் திரிணமுல் காங்கிரஸ் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், திமுகவுடன் தான் இந்திய தேசிய காங்கிரஸ் இருக்கிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி