வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் எஸ்.பி.யிடம் மனு

வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த தவெகவினர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளனர். காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை 100% பின்பற்றுவோம், 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் கொண்ட மினி மருத்துவமனை ஏற்பாடு செய்வோம், அவசர கால உதவிக்காக 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்வோம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்த மனுவை  தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் எஸ்.பி.,யிடம் அளித்துள்ளார். கடந்த வாரம் தவெக தலைவர் விஜய் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி