ஜனநாயகத்திற்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தவெக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், “ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்ஃபு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்” என எச்சரித்துள்ளார்.