ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்குத் ஆதரவு தெரிவித்த தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. மாயவன் மற்றும் நிர்வாகிகள் நேற்று (ஜூன் 13) மாலை சந்தித்துப் பேசினர். அந்தச் சந்திப்பில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைச் செயல்படுத்தாமல் திமுக அரசு ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்குத் தமது முழு ஆதரவை அளிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நன்றி: @TVKPartyHQ

தொடர்புடைய செய்தி