தமிழகத்தில் பொதுமக்களுக்கு சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தேனி கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, கரூர் பாணியில் ஓட்டமெடுத்து இருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. என விமர்சித்துள்ளார்.