சென்னையில் மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மழை நீர் தேங்குவதற்கு வடிகால் வசதிகள் இல்லாததே காரணம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு இருந்தும் 4½ ஆண்டுகளில் வடிகால் பணிகள் முடிக்கப்படாதது மக்கள் மீதான அக்கறையின்மையை காட்டுகிறது. மீதமுள்ள பருவமழை காலத்தில் மக்கள் சிரமமின்றி வாழ நடவடிக்கை எடுக்க அரசு வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நன்றி: PT