இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு இன்று (பிப்., 25) தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு விஜய் வருகை தந்தார். தொடர்ந்து நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.