கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக அரசியல் களம் இனி "தவெக vs பாஜக" என்ற புள்ளியை நோக்கியே நகரும் என்று தெரிவித்துள்ளார். தவெக என்பது திமுகவின் 'திராவிட மாடல் 2.0' தான் என்று விமர்சித்த அவர், வரும் காலங்களில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையேதான் முதன்மை போட்டி நிலவப்போகிறது என குறிப்பிட்டுள்ளார்.