மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக 'Constituency Insights' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தவெக 36% வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 31% வாக்குகளுடன் 2-ஆம் இடத்தையும், திமுக 25.8% வாக்குகளுடன் 3-ஆம் இடத்தையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல தாராபுரத்திலும் தவெக 33.8% வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.