"தவெக பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறவில்லை".. முகமது முபாரக்

தவெக அரசின் முதல் பட்ஜெட்டை SDPI மாநிலத் தலைவர் முகமது முபாரக் விமர்சித்துள்ளார். “புதுப் பானையில் பழைய சோறு என்பது போல பெயர் மாற்றங்களால் மட்டுமே மக்களை திருப்திப்படுத்த முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் தெளிவான செயல்பாடுகள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி