கடந்த ஜூலை 29-ம் தேதி நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், "திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு பக்க பலமாக இருப்பவர் துல்கர். கடந்த 5 ஆண்டுகளாக எந்த பிரச்சனை வந்தாலும் முதலில் எனக்காக வந்து நிற்பவர் அவர்தான். துல்கர் இல்லையென்றால் நான் என்னவாக இருப்பேன் என்றே எனக்கு தெரியாது" என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார்.